அப்துல்கலாம் சிந்தனைகள் : கையடக்க புத்தகம் தயாரித்த பொறியாளர்

published 1 year ago

அப்துல்கலாம் சிந்தனைகள் : கையடக்க புத்தகம் தயாரித்த பொறியாளர்

கோவை: அப்துல்கலாமின் சீரிய சிந்தனைகளின் கையடக்க புத்தகத்தை பள்ளி மாணவர்களுகாக 7மொழிகளில் தயார் செய்துள்ளார்.

பொறியாளர் ஒருவர் மறைந்த டாக்டர்.அப்துல் கலாம் 8 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பொறியாளர் அப்துல் கலாம் பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகத்தை தயார் செய்து, அதனை பழங்குடி கிராம பள்ளி குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அப்துல் கலாம் நினைவு நாளில் கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராம பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42) என்பவர் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளதாகவும், ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறார்.

விரைவில் 22 மொழிகளில் அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பொறியாளர் லூயீஸ் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe