இந்திய விமான படையில் சேர வேண்டுமா..? அழைப்பு விடுக்கிறது கோவை மாவட்ட நிர்வாகம்

published 1 year ago

இந்திய விமான படையில் சேர வேண்டுமா..? அழைப்பு விடுக்கிறது கோவை மாவட்ட நிர்வாகம்

கோவை: இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு (Agniveervayu) நியமன
முறையின்படி நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்திய விமானப்படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் அக்னிவீர்வாயுவாக ஜனவரி 2024 முதல் சேர இணயவழி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பூர்த்தி செய்வதற்கான விரிவான வழிமுறைகள் https://agnipathvayu.cdac.in  என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு அறிவிக்கை அக்னிவீர்வாயு உட்கொள்ளல் 2024 ஜனவரிக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

மேற்படி அறிவிக்கை தொடர்பான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கி ஆகஸ்ட் 17 அன்று முடிவடையும் எனவும்,  https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில்  விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe