கோவையில் மீன்பிடி தூண்டிலில் சிக்கிய பாம்பு!

published 1 year ago

கோவையில் மீன்பிடி தூண்டிலில் சிக்கிய பாம்பு!

கோவை : விவசாயிகளின் நண்பன் சாரைப்பாம்பு ஆகும். வயல்வெளிகளில் குழிகளைப் பறிக்கும் எலிகளுக்கு சாரைப்பாம்புகள்எமனாக விளங்குகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்ட வருகின்றன. இந்த பாம்பிற்கு அதிகளவு விஷத்தன்மை இல்லை.

பாம்புகள்  நிலம் மற்றும் நீர்நிலை போன்றஅனைத்து இடங்களிலும்  இருக்கும். இந்தச் சாரைபாம்பு பொதுவாக நீர் நிலையிலிருக்கும். மீன்பிடிக்க சென்ற ஒருவரின்  தூண்டில் முள்குத்தி, அதன் கழுத்திலும், உடலிலும் காயம் ஏற்பட்டது. இதனால் அது  தன் இயல்பான வேகத்துடன் ஓட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.

இதனைப் பார்த்த குறிச்சி பொதுமக்கள் சாரைபாம்பு உலா வருவதனை, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் பாம்பை மீட்க வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த மோகன் என்ற பாம்பு பிடி வீரர் அங்குச் சென்றார்.

அப்போது பாம்பு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. உடனடியாக அந்த பாம்பு கோவையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சாரைப் பாம்பின் உடலில் குத்தி இருந்த தூண்டில் முள் வெற்றிகரமாக கால்நடை துறை மருத்துவர்களால் அகற்றப்பட்டது. சாரை பாம்புக்கான அறுவை சிகிச்சை முடிந்ததும், காயத்துக்கான மருந்துகளை வைத்து சாரைப்பாம்பின் மீது கட்டினர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையிடம் அந்த சாரைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. 

குளம், ஏறி மற்றும் நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க தூண்டில் போடுவோர், அதனை முறையாக கண்காணித்தல் அவசியம் என்று வன உயிரியல் ஆர்வர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe