12 ராசிகளுக்குமான இன்றைய (01ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : புரிதல் அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : திருப்திகரமான நாள்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
கடகம்
தனவரவுகளின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். மறைமுகமான வியாபாரங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : முதலீடுகள் மேம்படும்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.
அஸ்தம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.
---------------------------------------
துலாம்
வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புத்திரர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
பணிபுரியும் இடத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மூலம் : மனக்கசப்புகள் குறையும்.
பூராடம் : மேன்மை ஏற்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலக பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : சிந்தனைகள் உண்டாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் நீங்கும்.
அவிட்டம் : முடிவு பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
வாழ்க்கைத் துணைவரை பற்றிய புரிதல் மேம்படும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். ஜாமின் கையெழுத்து விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
---------------------------------------
மீனம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
---------------------------------------