கோவை கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

published 1 year ago

கோவை கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கோவை: கோவையில் கடைவீதிகளில் பொதுமக்கள் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

பெண்களுக்கு பொதுவாகவே ஆபரணங்கள் மீது பற்று அதிகம். அதிலும் ஆடி மாதம் பலவிதமான சலுகைகள் இதற்காகவே உண்டு எனலாம். இன்று ஆடி  மாதம் 18-ம் தேதியையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் நிறையக் கடைகளில் பல சலுகைகள் உண்டு. அதுமட்டுமின்றி, இன்று ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாளும் கூட.

இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரை டவுன்ஹால் காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவையில் நகைக்கடைகள் அதிகம் உள்ள ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரிய கடைவீதி ,கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று நகை வாங்கிய வண்ணம் உள்ளனர்.

மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் மேற்கூறிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe