'பேபீ ப்லூஸ்'-னு கேள்விபட்டிருக்கீங்களா...?! அப்படினா என்ன-னு தெரிஞ்சுக்கலாம் வாங்க...

published 1 year ago

'பேபீ ப்லூஸ்'-னு கேள்விபட்டிருக்கீங்களா...?! அப்படினா என்ன-னு தெரிஞ்சுக்கலாம் வாங்க...

ஆமாங்க. 'பேபீ ப்லூஸ்'னு சொல்லுவாங்க இத. பிரசவத்துக்கு பின் பல பெண்களுக்கு இது மாதிரி ஒரு மன நிலை ஏற்படுகிறது. குழந்தையை பெற்று எடுத்த உடல் சோர்வு போகும் முன்பே குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு தாய்மார்களின் மேல் விழுவதே இதற்குக் காரணம். உடல் சோர்வோடு சேர்ந்து மனதும் சோர்வடைவதே இந்நிலை.  

பொதுவாகவே குழந்தை பிறந்த பின் பெண்கள் பதட்டமாக, சோகமாக, எரிச்சலுடன், செய்வது அறியாத திகைப்புடன் காணப்படுவர். ஒரு பெண்ணின் வாழ்வில் பெரும் மாற்றத்தை, புதிய பொறுப்பை கொடுப்பதில் ஒன்று குழந்தை பிறப்பு.  புதிதாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளப்படும் நேரமே இந்த மனநிலை மாறுதலுக்கு காரணமாக அமைகிறது. 


குழந்தையை பெற்று எடுத்த பின் உடல் அளவிலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பால் சுரக்க தொடங்குதல், கற்பப்பை சுறுங்குதல் ஆகிய உடல்நிலை மாறுப்பாடுகளை ஏற்படுத்தும் பொருட்டு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களும், தூக்கமின்மை, உடல் சோர்வு, கூடுதல் பொறுப்பு ஆகியவை ஏற்படுத்தும் மன அழுத்தமும் இதற்கு காரணமாக அமைகிறது. இந்த மாற்றங்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது குழந்தை பெற்றபின் ஏற்படும் மனஅழுத்தமாக கருதப்படுகிறது.

குழந்தையை பெற்று எடுத்த பெருமிதமும் குடும்பத்தார் மற்றும் துணைவரின் ஆதரவும் பெண்களை இந்த சோர்விலிருந்து மீட்டாலும் சில பெண்களுக்கு இது ஒரு பலுவாகவே தெரிகிறது.  இவ்வாறு ஏற்படும் நிலையில் அப்பெண்களுக்கு அதீத கோபம் ஏற்படுதல், எரிச்சல் அடைதல், குழந்தை மற்றும் தனது உடல்நிலையை பேணாது இருத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இது மன பிரமைகள் அல்லது குழந்தையை காயப்படுத்தும் எண்ணங்களை போன்ற  தீவிரமான அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், மன நிலையை சீராக வைத்துக் கொள்ளுதல் ஆகியன இந்த நேரத்தில் மிகவும் அவசியம். இது போன்ற அசம்பாவிதங்கள் நடங்காமல் தவிர்க்க மிதமான மனநிலை மாறுதல்கள் ஏற்பட்ட உடனே மன நல மருத்துவரையோ மன நல ஆலோசகரையோ சந்திப்பது நல்லது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe