பெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள்..!

published 1 year ago

பெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள்..!

 இந்திய கலாச்சாரத்தின்படி திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது,மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவித்தல். திருமணமான பெண்கள் தங்கள் காலில் மெட்டி அணிவது இந்தியர் மரபு. இது இந்தியப் பாரம்பரிய கலாச்சாரங்களில் இன்றும் கடைப்பிடித்து வரும் மரபு.

பழங்கால வழக்கத்தில், திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்குத் தாலியும் தான் அடையாள அணிகலன்களாக இருந்தது.இதற்குப் பின்னாலும் ஒரு அறிவார்ந்த காரணம் பொதிந்து இருந்தது. பெண்ணானவள் எப்போதும் நிலத்தைப் பார்த்து நடக்கப் பழக்கப்பட்டதால், தனக்கு எதிரே வரும் ஆணின் காலைப் பார்த்து அவன் திருமணம் ஆனவனா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அவன் காலில் அணிந்திருந்த மெட்டி உதவியாக இருந்தது. அதே போல் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் ஆண், எதிரே வரும் பெண்ணின் கழுத்தில் தென்படும் திருமாங்கல்யத்தை வைத்து அவள் திருமணமானவள் என்பதைத் தெரிந்து கொள்கிறான்.காலப்போக்கில் மெட்டி என்பது பெண்ணின் ஆபரணப் பட்டியலில் சேர்ந்து விட்டது.

இந்திய மரபும்  அறிவியலும் 

திருமணம் முடிந்ததும் சிறிது காலத்தில்,தம்பதியினரிடம் எல்லோரும் கேட்பது,எதிர்பார்ப்பது மழலைச் செல்வத்தை. அதற்கு ஒரு பெண்ணை தயார் செய்யவும் மெட்டி பெரும் பங்கு வகிக்கிறது. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ளவர்களுக்குத் தீர்வு கிடைப்பதோடு, அவை சீரான முறையில் செயல்படும் காரணமாக அமைகிறது.பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாகச் செல்கிறது என்பதால் திருமணமான பெண்களுக்குக் கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது.மேலும் பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்புநுனிகள் வந்து முடிவதால், மெட்டி அணிந்து நடக்கும் போது நரம்புநுனி அழுத்தப்படுவதாலும் கருப்பை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

ஆகவே பெண்கள் மெட்டியை அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.  கடமைக்கு என்று கருதாமல் சடங்குகளின் காரண காரியங்களை அறிந்து கொண்டு கடைப்பிடிப்போம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe