குழந்தைகளுக்கான சுவையான 'ஈவ்னிங்- ஸ்நாக்ஸ்' ரெசிபி..

published 1 year ago

குழந்தைகளுக்கான சுவையான 'ஈவ்னிங்- ஸ்நாக்ஸ்' ரெசிபி..

குழந்தைகளுக்குச் சாப்பிட ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி கொடுப்பதை விட நாம் நம் கையால் சத்தானதாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் செய்து கொடுக்கவே பெரும்பாலான தாய்மார்கள் விரும்புகின்றன. இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். 

இனிப்பு பணியாரம் எப்படிச் செய்வது என்று விரிவாகப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

வெல்லம் - 200g

தண்ணீர்

அரிசி மாவு  - 200g

மைதா மாவு -100g

உப்பு - தேவையானளவு

ஏலக்காய் பவுடர் - 1/4 தே.கரண்டி

பேக்கிங் சோடா - 1/4 தே.கரண்டி

நெய்

செய்முறை

முதலில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து பாகு பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு, ஏலக்காய் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்ததாகக் கலந்து எடுத்துக்கொண்ட கலவையுடன், கரைத்து வைத்த வெல்லத்தைச் சேர்த்த தண்ணீர் சேர்க்காமல் குழிப்பணியாரத்திற்குப் போன்று கலந்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக குழிப்பணியார பாத்திரத்தில் நெய் ஊற்றி, இதை வேக வைத்து எடுத்தால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe