கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்…

published 2 days ago

கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 31,85,594 உள்ளனர். அதில் 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

அக்டோபர் முதல் நவம்பர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலானது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மேட்டுப்பாளையத்தில் 1,49,826 ஆண் வாக்காளர்கள், 1,62,018 பெண் வாக்காளர்கள், 47 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,11,891 வாக்காளர்கள்,

சூலூரில் 1,62,086 ஆண் வாக்காளர்கள், 1,72,126 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,34,311 வாக்காளர்கள் உள்ளனர்.

கவுண்டம்பாளையத்தில் ஆண் வாக்காளர்கள் 2,43,839, பெண் வாக்காளர்கள் 2,47,143, மூன்றாம் பாலினத்தவர் 151 என மொத்தம் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை வடக்கு மாவட்டத்தில் 1,73,043 ஆண் வாக்காளர்கள், 1,72,855 பெண் வாக்காளர்கள், 36 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,45,934 வாக்காளர்கள் உள்ளனர்.

தொண்டாமுத்தூரில் 1,68,227 ஆண் வாக்காளர்கள், 1,74,557 பெண் வாக்காளர்கள், 144 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,42,928 வாக்காளர்கள் உள்ளனர்;

கோவை தெற்கு மாவட்டத்தில் 1,21,431 ஆண் வாக்காளர்களும், 1,23,398 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,44,863 வாக்காளர்கள் உள்ளனர்;

சிங்காநல்லூரில் 1,66,199 ஆண் வாக்காளர்கள், 1,70,611 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,36,842 வாக்காளர்கள் உள்ளனர்;

கிணத்துக்கடவில் 1,70,808 ஆண் வாக்காளர்களும், 17,89,63 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 3,49,815 வாக்காளர்கள் உள்ளனர்.

பொள்ளாச்சியில் 1,08,969 ஆண் வாக்காளர்களும், 1,20,073 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,29,086 வாக்காளர்கள் உள்ளனர்.

வால்பாறை  தொகுதியில் 94,250 ஆண் வாக்காளர்கள், 1,04,505 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் வாக்காளர்கள் என மொத்தம் 1,98,781 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும் இது தொடர்பாக www.voters.eci.gov.in  எனும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது Voters Helpline App என்ற செயலி மூலமாகவோ பொதுமக்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe