கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு 1280 லிட்டர் தாய்ப்பால் தானம்

published 1 year ago

கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு 1280 லிட்டர் தாய்ப்பால் தானம்

கோவை : தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இந்த வாக்கு பொதுவாக நன்றி மறவாமைக்காக கூறப்படுவது. ஆனால், இதற்கும் ஒரு படி மேலாய் இவ்வாக்கிற்கு உண்மை சாட்சியாய் நிற்பது ஒரு தாயவளின் தாய்ப்பால! 

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது. 

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தாய்ப்பால் குறித்த வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 

போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்குச் சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நலத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கர்ப்பிணிகள், தாய்மார்களுக்குத் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்துக் காண்பித்தனர். 

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்குப் புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்குக் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். 

இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நலத்துறைத் தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசிகுமார் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் செந்தில்குமார், சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe