மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயிலை வழிமறைத்து காட்டு யானை அட்டகாசம்

published 1 year ago

மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயிலை வழிமறைத்து காட்டு யானை அட்டகாசம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து தினந்தோறும் காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. பயணிகள் வனங்களை ரசித்தபடியும், இயற்கை நீர்வீழ்ச்சிகளைப் பார்த்த படியும் ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். 

ஹில்குரோவ் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. மேலும் ரெயிலை நோக்கியும் யானை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே மலை ரெயிலில் பயணித்தவர்கள், தண்டவாளத்தில் காட்டு யானை நிற்பதைப் பார்த்து அச்சம் அடைந்தனர்.

இருப்பினும் யானையைப் பார்த்த ஆர்வத்தில், ரெயிலில் இருந்தபடி அங்குச் சுற்றி வந்த காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர். இதற்கிடையே யானை ரெயிலை மறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையைக் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 10 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் திரும்பிச் சென்றது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் யானை ரெயிலை மறித்த வீடியோவை பயணிகள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe