சிமெண்ட் விற்பனையில் 26 லட்சம் மோசடி, விற்பனை அதிகாரி கைது

published 1 year ago

சிமெண்ட் விற்பனையில் 26 லட்சம் மோசடி, விற்பனை அதிகாரி கைது

கோவை : கோவை ராமநாதபுரம்,சக்தி நகர்,நடேசன் .இவரது மகன் ராதா (வயது 67) இவர் கோவை ராமநாதபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சிமெண்டு வாங்கி விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்தில் மேனஜராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. 

ராதா போலீசில் கொடுத்த புகாரில்கோவை பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவரது மகன் சபரீஸ்வரன் (35) மற்றும் நாமக்கல் ராசிபுரம் குறுகாபுறம் சேர்ந்த கந்தசாமி.இவரது மகன் குணசேகரன் (30)  இவர்கள் இருவரும் எங்கள் கம்பனியில் சேல்ஸ் அதிகாரிகளாக வேலை செய்து வருகின்றனர். 3 வருடமாக சிமெண்ட் விற்பனை செய்ததில் பணம் கையாடல் செய்து இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கூப்பிட்டு விசாரித்ததில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 ஈரோடு மாவட்டத்தில் 2021 வருஷம் சிமெண்ட் விற்பனை செய்ததில் ரூபாய்.26 லட்சத்து மூவாயிரத்து இறநூத்தி என்பதிநான்ங்கு  (26,03,284/-) கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாகக் கேட்டபோது மேனேஜர் ராதா வாகிய என்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தார் சவரீஸ்வரன் இது குறித்து கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரீசனை கைது செய்தனர். 

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe