சிறப்புக் குழந்தைகளுடன் கலெக்டர் கலகலப்பு பேச்சு

published 1 year ago

சிறப்புக் குழந்தைகளுடன் கலெக்டர் கலகலப்பு பேச்சு

கோவை : கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும்,  குழந்தைகள் குடும்பம்  சிறப்புக் குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

இந்த சிறப்புக் குழந்தைகள் காப்பகத்தில்  24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம்  உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அங்கிருந்த குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். 

போத்தனூர் பகுதியில் உள்ள  செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் 61 பெண்கள் மற்றும்  42 ஆண்கள் உள்ளனர்.

 இந்த இல்லத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு  அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்  குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe