ஜெயிலர் : கோவை சாந்தி திரையரங்கில் கொண்டாடிய ரசிகர் பட்டாளம் | புகைப்பட தொகுப்பு

published 1 year ago

ஜெயிலர் : கோவை சாந்தி திரையரங்கில் கொண்டாடிய ரசிகர் பட்டாளம் | புகைப்பட தொகுப்பு

கோவை ரயில் நிலையத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளன நிலையில், ரசிகர்கள் பட்டாசுகள்ள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், குத்தாட்டம் போட்டும் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பிரபல திரையரங்கான சாந்தி திரையரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது

கோவையை பொருத்தவரை பிரதான திரையரங்குகள் அனைத்திலும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

இதனிடையே இன்று காலை 7 மணி முதலே ரசிகர்கள் பல்வேறு திரையரங்கம் முன்பு குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சாந்தி திரையரங்கம் முன்பு ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்தனர். பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் ஜமாப் இசைக்கு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

ஜெய்லர் படம் வெற்றியை பெரும் என்றும் "என்றும் ரஜினி" என்றும் கோஷங்களை எழுப்பியவாறு திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். படம் முடிந்து வந்தவுடன் எப்படி இருந்தது என்று ரிவ்யூ கேட்கலாம்..
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe