திமுக சார்பில் ரத்ததான இயக்கம் : ஆயிரம் பேர் ரத்ததானம் செய்தனர்..!

published 2 years ago

திமுக சார்பில் ரத்ததான இயக்கம் : ஆயிரம் பேர் ரத்ததானம் செய்தனர்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் தளபதி ரத்ததானம் இயக்கம் சார்பில்  கலைஞரின்  99வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

கோவை மாநகர திமுக சார்பாகவும்  கோவை மாநகர் கிழக்கு மாவட்ட  திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில், கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட "தளபதி இரத்த தானம் இயக்கம்" பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில், மறைந்த திமுக தலைவர்  கலைஞரின்  99வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும்  திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் தலைமையில்  தளபதி ரத்ததானம் இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

ரத்ததான முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் , திமுக தொண்டர்கள், இளைஞரணி மாணவரணியைச்  சேர்ந்தவர்கள், பொதுமக்கள்  இரத்ததானம் அளித்தனர். தானம் செய்த ரத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர்  பொங்கலூர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உள்ளிட்ட  திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe