கோவையில் 'ஃபுட் ஸ்ட்ரீட்' அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அரசு: எங்கே...? முழு விவரம்...

published 1 year ago

கோவையில் 'ஃபுட் ஸ்ட்ரீட்' அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அரசு: எங்கே...? முழு விவரம்...

கோவை: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முயற்சியால் நாடு முழுவதும் பல பகுதிகளில் 'ஃபுட் ஸ்ட்ரீட்' எனப்படும் 'உணவுத் தெரு' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு அமைப்புடன் (FSSAI) இணைந்து  நாடு முழுவதும் சுமார் 100 சுகாதாரமான உணவு தெருக்கள் உருவாக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் படி, வ.உ.சி பூங்காவிற்கு செல்லும் வழியான வ.உ.சி மைதான சாலை உணவுத் தெருவாக மேம்படுத்தப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான மத்திய அரசு அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முன்மொழிவுகளை அனுப்பியிருந்தனர். இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களின் பட்டியிலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கோவை வ.உ.சி மைதானம் சாலை தவிர, சென்னை வேளாங்கண்ணி சர்ச் தெரு மற்றும் எலியட்ஸ் கடற்கரை சாலையும் மாமல்லபுரம் கோவில் தெருவும் இத்திட்டத்திற்காக  தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு தெருக்களுக்கும் தலா ரூபாய் 1 கோடி என மொத்தம் ரூ.4 கோடி செலவில் உணவுத் தெருவாக மேம்படுத்துவதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது பற்றி கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இந்த நிதியைப் பயன்படுத்தி வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான சாலைகள், கழிப்பறைகள், வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள், குடிநீர் வசதிகள் மற்றும் விற்பனை மண்டலங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வோம்.

அதுமட்டுமல்லாமல், சாலையில் வியாபாரம் செய்யும் தெருவோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு பதப்படுத்துதல் குறித்து தேவையான பயிற்சியையும் வழங்குவோம். தற்போது, வ.உ.சி பூங்கா மற்றும் மைதான சாலையில் சுமார் 51 வியாபாரிகள் உள்ளனர். இவர்களுக்கான விற்பனை மண்டலங்களைக் கண்டறிந்த பிறகு, புதிய விற்பனையாளர்களுக்கு இடம் ஒதுக்குவோம்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe