கோவையில் அரசு மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை

published 1 year ago

கோவையில் அரசு மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் ராஜன் பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி மாரியம்மாள் (45). கோவை அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டியாக உள்ளார். 

இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கோவை அரசு மருத்துவமனையில்  8 ஆண்டுகளாகப் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு பணிபுரிகின்ற ஊழியர்களுக்குத் தனியார் நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மேலும் கலெக்டர் சமீரன் அறிவித்தபடி அரசு மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய தூய்மை பணியாளர்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு தினக்கூலி ரூ.731 என்று அறிவித்தும் இப்போது வரை ரூ.437 மட்டுமே தருகின்றனர். அரசு மருத்துவமனையில் வேலை செய்யக்கூடிய பெண் ஊழியர்களுக்கு மேனேஜர் தினேஷ் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கிறார். பாலியல் சீண்டல் கொடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக அந்த பெண்களை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறார். இல்லையென்றால் வேறு இடத்திற்குப் பணி மாறுதல் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். 

பெண் ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகத் தகாத வார்த்தைகளால் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டர் அலுவலகத்திலும், முதல்வர் தனிப் பிரிவிற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இவ்வாறு மாரியம்மாள் அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe