குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தொழிற்கடன் விழா- மாவட்ட நிர்வாகம் அழைப்பு.

published 1 year ago

குறு சிறு மற்றும் நடுத்தர  தொழில்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தொழிற்கடன் விழா- மாவட்ட நிர்வாகம் அழைப்பு.

கோவை : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்குக் கடனுதவி மற்றும் மானிய சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும் உற்பத்தியை

பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கோவை கிளை அலுவலகத்தில் (முகவரி: கொடிசியா, GO நாயுடு டவர்ஸ், கூதவு எண்A.ஒசூர் ரோடு. கோயமுத்தூர் ) குறு சிறு மற்றும் நடுத்தா (MSME) தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கூடன் விழா 21.08.2023 முதல் 01.09.2022 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டிஐஐசி (TIIC) -வின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (35% மானியம்) {AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்குத் தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.50  வரை வழங்கப்படும். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூடுதல் 5% மானியம் வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe