குழந்தைகளுடன் இணைந்து சைக்கிள் ஓட்டிய கோவை கலெக்டர்

published 2 years ago

குழந்தைகளுடன் இணைந்து சைக்கிள் ஓட்டிய கோவை கலெக்டர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை : உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் துவக்கி வைத்து, குழந்தைகளுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12  உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

 அதன் ஒரு பகுதியாகக் கோவை தனியார் பள்ளி மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் வ உ சி மைதானத்திலிருந்து - ஹோப் கல்லூரி, ஃபன் மால் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் சைக்கிள் பேரணியாகச் சென்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுடன் தானும் சைக்கிள் ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe