கோவையில் முதியோர்களுக்கென்றே சிறப்பு மருத்துவமனை : உதவி எண் அறிமுகம்

published 1 year ago

கோவையில் முதியோர்களுக்கென்றே சிறப்பு மருத்துவமனை : உதவி எண் அறிமுகம்

கோவை : உலக மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாகக் கோவையில் இயங்கும் ”இன் ஹவுஸ் மெடிக்கேர்” முதியோருக்கு முதல் வணக்கம் எனும் முதியோர் உதவி எண்ணை அறிமுகம் செய்தனர் . 

கோவை ராம் நகர்ப் பகுதியில் ”இன் ஹவுஸ் மெடிகேர்” எனும் முதியோர்களுக்கான பராமரிப்பு மையம் இயங்கி வருகின்றது. முதியோர்களைத் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாகப் பராமரிப்பதற்கான மருத்துவ வசதி, மறுவாழ்வுக்கான வசதிகள் என அனைத்து வசதிகளும் இம்மையத்தில் இருக்கின்றன. 

முதியோர் நலன் சார்ந்து இயக்கும் இந்த மையத்தில், மூத்த குடிமக்களுக்கான தினத்தை முன்னிட்டு முதியோருக்கு முதல் வணக்கம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக முதியோர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்காக பிரத்யேக முதியோர்உதவிஎண்ணை  ”இன் ஹவுஸ் மெடிகேர்” பராமரிப்பு மய்யம் அறிமுகம் செய்தது. 

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு, முதியோர் உதவி எண்ணான 9626332220 என்ற அலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் மக்களைத் தேடி மருத்துவம் போன்று, தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக முதியோரைத் தேடிச் சென்று உதவுகின்ற புதுமை திட்டமாக, முதியோருக்கு முதல் வணக்கம் திட்டம் அமைந்திருக்கின்றது. இது குறித்து ”இன் ஹவுஸ் மெடிகேர்” மையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்கினர்  ஹசீப் கான் கூறுகையில், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த முதியோர் பராமரிப்பு மையத்தை நடத்தி வருவதாகக்  கூறினார். 

முதியவர்களுக்குச் சிறந்த மருத்துவத்தைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், முதியவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கே சென்று நூற்றுக்கும் மேற்பட்ட  இலவச முகாம்களை நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார். வயதான காலத்தில் மருத்துவ வசதி மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆதரவும் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், முதியோர்களுக்கான அனைத்து சேவைகளையும் வழங்குவதாகக் கூறினார்.

 ”இன் ஹவுஸ் மெடிகேர்”ல் வாத நோய், எலும்பு முறிவு போன்ற நோய்களுக்குச் சிறந்த சிகிச்சை தருவதாகவும், மருத்துவமனையில்  சிகிச்சை முடிந்தாலும், அவர்களது வாழ்வில் மீண்டும் தானாக இயங்க உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி வழங்குவதாகத் தெரிவித்தார். தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள முதியோர் உதவி எண்ணைத் தொடர்புகொண்டால், அலைபேசி ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதாகத் தெரிவித்தார். 

கோவையில் வசித்து வரும்  மூத்த குடிமக்கள் எந்த விதமான உதவியையும் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வீட்டிற்கே சென்று கூட உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக ஹசிப் கான் தெரிவித்தார். முதியோர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டுவரும் ”இன் ஹவுஸ் மெடிகேரின்” இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe