சந்திரயானை சுமக்கும் விநாயகர்.. கோவை கலைஞரின் படைப்பு

published 1 year ago

சந்திரயானை சுமக்கும் விநாயகர்.. கோவை கலைஞரின் படைப்பு

கோவை: சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளதை முன்னிட்டு விநாயகர் சந்திரயான் விண்கலத்தை தாங்கி நிற்பது போன்ற வடிவத்தை கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார்.

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. விக்ரம் லேண்டர் இந்த விண்கலத்தை நிலவில் தரையிறக்க உள்ள நிலையில் நாடே பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.

இதனிடையே கோவையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் விநாயகர் சிலை சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்ற வடிவத்தை தயாரித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. தங்க நகை தொழிலாளியான ஒவர் வித்தியாசமான ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு பொருட்களை தயாரித்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர் சீத்தாப்பழங்களில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்டு தேச தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓவியங்களை வரைந்தார்.

இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே களிமண் கொண்டு விநாயகர் உருவத்தை தயாரித்துள்ளார் ராஜா. இந்த விநாயகர் சந்திரயான் விண்கலத்துடன் நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரையும், நிலவையும் தாங்கி பிடித்தவாறு உருவத்தை ராஜா வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வடிவத்தை தயாரித்துள்ளதாக ராஜா தெரிவித்தார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe