சந்திரயான் 3 |முகத்தில் வண்ணங்கள் தீட்டி கொண்டாடிய கோவை மாணவர்கள் - புகைப்பட தொகுப்பு

published 1 year ago

சந்திரயான் 3 |முகத்தில் வண்ணங்கள் தீட்டி கொண்டாடிய கோவை மாணவர்கள் - புகைப்பட தொகுப்பு

கோவை: சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விக்ரம் லேண்டரின் மாதிரி வடிவத்தை தயார் செய்து, முகங்களில் சந்திரயான் விண்கலத்தை வரைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தின் தரையிறக்கி வரலாற்று சாதனையை நிகழ்ச்சியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்  

இதனை நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஒவ்வொருவரது வெற்றியாக கருதி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு பள்ளி மாணவர்கள் சந்திரயானின் விக்ரம்லேண்டரையும், பிரக்யான் ரோவரின் மாதிரியை தத்ரூபமாக செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் முகங்களில் தேசியக்கொடி, சந்திரயான் விண்கலம், இஸ்ரோவின் இலச்சினை வரைந்து கொண்டாடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe