கோவையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் தமிழக அரசு வாபஸ் பெற வலியிறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்.

published 1 year ago

கோவையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் தமிழக அரசு வாபஸ் பெற வலியிறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோவை : பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஏராளனான மோட்டார், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்பினர் தெரிவித்து வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இச்சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறது எனவும் இச்சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தியும், சிஐடியூ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள,  பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திமுக அரசு, உடனடியாக புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் தமிழ்நாட்டில் வாபஸ் பெற வேண்டும் எனவும் அபராதம் என்பது செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமே, தவிரத் தொழிலாளிகளைக் கடனாளியாக்கி தொழிலையே செய்யவிடாமல் பண்ணுவதற்கல்ல என்பதை திமு.க அரசு உணர்ந்து ஆன்லைன் அபராதம், ஸ்மார்ட் பைன் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் வாகனங்களான டுவீலரை வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்த பின்னரும் கூட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி டூவீலர் பைக் டேக்ஸி இயங்கி வருகிறது எனக் கூறிய அவர்கள்,

உயர்நீதிமன்றத்தில் ரேபிடோ பைக்டேக்ஸி பெற்றிருக்கிற தடை உத்தரவிற்கு எதிராக ஆட்டோ தொழிலாளர்களின் நலன் சார்ந்த வாதங்களை முன்வைத்த play store ,ல் இருந்து ரேபிடோ மற்றும் ஓலா செயலிகளை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியின் தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்டுகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. CITU சார்பில் ஸ்டேண்டு அமைக்க அனுமதி கேட்டால் மறுப்பது,பெயர்ப் பலகையை அகற்றுவது வழக்குப் பதிவு செய்வது என்று கோவை மாநகர காவல்துறை கடுமை காட்டுகிறது எனக் கூறிய அவர்கள், ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்துக்கு எந்தக் கட்டுப்படுப்பாடும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது எனச் சாடினர்.  இந்நிலையை ஏற்க முடியாது எனவும், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்காத இடங்களில் பாரபட்சம் இல்லாமல் ஸ்டேண்டுகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என சிஐடியூ வின் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe