கோவையில் 2 நாட்களாக நகை பறிப்பு சம்பவம் அதிகரிப்பு.. 7 தனிப்படைகள் அமைப்பு.. பெண்களே உஷார்..!

published 1 year ago

கோவையில் 2 நாட்களாக நகை பறிப்பு சம்பவம் அதிகரிப்பு.. 7 தனிப்படைகள் அமைப்பு.. பெண்களே உஷார்..!

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடரும் நகைப்பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி நகை பறிக்கும் ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை ரத்தினபுரி சாதிக்பாஷா தெருவை சேர்ந்தவர் கமலம்(73). இவர் நேற்று முன்தினம் தண்டு மாரியம்மன் கோயில் அருகே நின்றிருந்த போது அங்கு வந்த 2 பேர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து பைக்கில் தப்பி சென்றனர். இதேபோல் கோவை டாடாபாத் 9-வது வீதியை சேர்ந்த ஜானகி(50) என்பவரிடம் 4 பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்த லதா(55) என்பவர் பால் வாங்கி கொண்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஆசாமிகள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர்.

இதேபோல், கோவை ருத்ரப்பா நகர் 2வது தெருவை சேர்ந்த தாமரை செல்வி(58) என்பவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். கடந்த 2 நாட்களில் கோவை மாநகரில் மட்டும் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சம்பவங்கள் கோவை ஊரகப்பகுதிகளிலும் அரங்கேறி வருகிறது.

இது குறித்து மாநகர காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், ஹெல்மெட் அணிந்தபடி திருட்டு பைக்கில் சென்று மர்ம நபர்கள் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இந்த 4 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த 4 நகைபறிப்பு சம்பவங்களிலும் 4 பேர் ஈடுபட்டிருப்பது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது தெரியவந்துள்ளது. அவர்கள் ஓட்டி வந்த பைக் பெரியகடைவீதி, வெரைட்டிஹால் ரோடு பகுதிகளில் திருடப்பட்டுள்ளது.

நகைபறிப்பு ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு தீவிர ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. நகைப்பறிப்பு ஆசாமிகள் விரைவில் பிடிபடுவார்கள்’’. என்றார்.

இதனையடுத்து போலீசார் கோவை நகரின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவையில் அடுத்தடுத்து தொடரும் நகைப்பறிப்பால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

நியூஸ் க்ளவுட்ஸ்

எனவே கோவை பெண்களே உஷாராக இருங்கள்,  நகை பறிப்பு கும்பலை பிடிக்கும் வரையில் வெளியில் செல்லும் போது தங்கள் அணிந்திருக்கும் நகை வெளியில் தெரியாதபடி அணிந்து கொள்ளுங்கள், முகம் தெரியாத நபர் பேச்சுக்கொடுக்க வந்தால் சற்று விலகி நின்று பேசுங்கள். காவலன் SOS என்ற செயலியை உங்களது மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் காவல்துறையில் எளிதாக தொடர்பு கொள்ள இந்த செயலி உதவும். ந்த செய்தியை படிக்கும் ஆண்கள் பெண்களிடம் பகிர்ந்து உஷார்படுத்துங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe