தமிழகத்தில் புதிய ரயில் சேவை துவக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

published 1 year ago

தமிழகத்தில் புதிய ரயில் சேவை துவக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தமிழகம் : தமிழகத்தில் ரயில் பயணிகளின் சேவை அதிகரித்து வருவதால், கூடுதல் ரயில் சேவையை அமுல்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை இயக்கபட உள்ளது. நேரடி இரயில் சேவை தூத்துக்குடி - கேரளாவுக்கு தொடங்கப்படயுள்ளது.

வந்தே பாரத் விரைவு ரயில் சேவை சென்னை எழும்பூர்- திருநெல்வேலி விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.

மாயவரம்-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் மூன்று ரயில்களை இணைத்து மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயிலாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ரயில்கள், மதுரை- செங்கோட்டை பாசஞ்சர், செங்கோட்டை-புனலூர் பாசஞ்சர், புனலூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை - குருவாயூர் விரைவு ரயிலாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி- எர்ணாகுளம் இடையே வாரம் இரண்டு முறை புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி - கொல்லம் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயங்கும் புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.(வழி - சித்தூர்- காட்பாடி- சேலம்- ஈரோடு)

திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe