கோவையில் ஓணம் சிறப்பு வழிபாடு: அலைமோதிய மக்கள் கூட்டம்

published 1 year ago

கோவையில் ஓணம் சிறப்பு வழிபாடு: அலைமோதிய மக்கள் கூட்டம்

கோவை: இந்த ஆண்டு கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான ஓணம், ஆகஸ்ட் 20-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று, திருவோணம் வரை, பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திருவோண நாளான இன்று திருவிழாவின் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுவதை முன்னிட்டு சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த நாளில் பழம்பெரும் மன்னர் வீரோச்சனாவின் மகனும் பிரஹலாதனின் பேரனுமான மன்னர் மகாபலி, பாதாள உலகத்திலிருந்து தனது மக்களைப் பார்க்க கேரளாவுக்குத் திரும்புகின்றார் என்று நம்பப்படுகிறது. இந்தத் திருவிழா மலையாள ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ஓணம் பண்டிகை ஆங்கில நாட்காட்டியில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் ‘சிங்கம்’ மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

கோவை மாவட்டம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு ஏரளமான கேரள மக்கள் வசித்து வரும் நிலையில், இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். இன்று திருவோணத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன்   திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் செண்டை மேளம் முழங்க மூல தெய்வமான ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe