கோவையில் ஈவு இறக்கம் இல்லாமல் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்... சிசிடிவி காட்சி..!

published 1 year ago

கோவையில் ஈவு இறக்கம் இல்லாமல் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்... சிசிடிவி காட்சி..!

கோவை: கோவை காந்திபுரம்  பகுதியில் வீட்டு வாசலில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க மாநகர காவல் ஆணையர் பாலமிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த 25ம் தேதி காந்திபுரம் அடுத்த டாடாபாத் 9 வது வீதி பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீட்டு வாசலில் செருப்பை கழட்டி விட்ட  ஜானகி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்சர் வாகனத்தில் வரும் இரண்டு நபர்கள் சங்கிலியை பறித்து தப்புவதும் அதில் நிலை குலைந்த ஜானகி சிருண்டு விழுவதும் ஐசிடிவி யில் பதிவாகியுள்ளது.சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்  கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு வாலிபர்களும் வடமாநிலத்தை செந்தவர்கள் என சந்தேகிப்பதாகவும் குற்றவாளிகளை  நெருங்கிவிட்ட சூழலில் ஓரிரு தினங்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை காண லிங்க்-ஐ சொடுக்கவும் : https://youtube.com/shorts/z8NDIzOgohw?si=dzPJRUr5rKxgAmfq

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe