கோவையில் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் நகை, ரூ.2லட்சம் கொள்ளை

published 1 year ago

கோவையில் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து,  17 பவுன் நகை, ரூ.2லட்சம் கொள்ளை

கோவை : தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி பூம்புகார் நகரை சேர்ந்தவர் ஜான்சன், 36, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்றார். பின் அங்கிருந்து அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

நேற்று முன்தினம் ஜான்சனின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அவருக்கு போன் செய்து தெரிவித்து உள்ளார். உடனே ஜான்சன் அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 17 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஜான்சன் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த, 28ம் தேதி கணபதியில் இதேபோன்று ஒரு வீட்டில், 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.75 லட்சம் கொள்ளை போயிருந்தது. இந்த இரு கொள்ளை சம்பவமும் ஒரு நாள் வித்தியாசத்தில் நடந்து உள்ளது. அதனால் இந்த இரு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரு கும்பல என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe