புதிய பாரத எழுத்தறிவு திட்டம் : கோவையில் 19 ஆயிரம் பேருக்கு அடிப்படை கல்வி

published 1 year ago

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் : கோவையில் 19 ஆயிரம் பேருக்கு அடிப்படை கல்வி

கோவை: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கோவையில், 19 ஆயிரத்து 87 பேருக்கு அடிப்படை கல்வி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில், நுாறு சதவீத எழுத்தறிவு இலக்கை அடைய, மாநில வாரியாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒருங்கிணைந்த கல்வி சார்பில், மாவட்ட வாரியாக மையங்கள் அமைத்து, எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு மாலை நேர வகுப்பு கையாளப்படும்.

தினசரி மாலை ஒரு மணி நேரம், தமிழ் எழுத்துகள், எண்கள் அறிமுகம் செய்யப்படும்.நேற்று (1ம் தேதி) முதல் வரும் பிப்., மாதம் வரை நடக்கும் திட்டத்திற்கான வகுப்பில், எழுத்துகளை அறிமுகம் செய்தல், வாசிக்க வைத்தல், வார்த்தைகளை அறிமுகம் செய்தல், பிழையின்றி எழுத வைப்பது, கையெழுத்திட சொல்லி தருதல், அடிப்படை கணக்குகளுக்கு தீர்வு காண்பது முதல், கடிதம், வங்கி படிவங்களை பூர்த்தி செய்தல் ஆகியவை கற்றுத்தரப்படும்.

கோவை மாவட்டத்தில்,1,336 மையங்களில், திட்டத்தில் பயன்பெற, 19 ஆயிரத்து 87 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் கொண்டு இன்று முதல் மாலை நேர வகுப்பு, அந்தந்த மையங்களில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாதோருக்கு, அடிப்படை கல்வி வழங்க, பிரத்யேக சிலபஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் முறையாக நடப்பதை உறுதி செய்ய, தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வு செய்வர். பிப்.மாதத்திற்கு பின், தேர்வு நடத்தப்படும்" என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe