கோவையில் உலக தென்னை தினம் - 2023

published 1 year ago

கோவையில் உலக தென்னை தினம் - 2023

கோவை: வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக வளாகத்தில் இன்று உலக தென்னை தினத்தை கொண்டாடின.

இவ்விழாவில் முதற்கட்டமாக தென்னைப்பற்றிய விரிவான கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

கருத்துக்காட்சியில் ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு நீரா பானத்தை புது விதமாக பாட்டிலில் அடைத்து விற்கும் முறையை முதன்முதலாக காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நீரா பானம் 3 நாட்கள் வரை மிதமான வெப்பநிலையிலும் ஆறு மாதங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியிலும் வைக்க இயலும்.

மேலும் கருத்துக்காட்சியில் தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது. வேளாண்மைத்துறை மூலம் தென்னை ரகங்கள், தென்னை ஒட்டு கட்டுதல் காட்சிப்படுத்தப்பட்டது. கருத்துக்காட்சியில் நவீனமயமாக்கப்பட்ட தென்னை மரம் ஏறும் கருவி குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

இதில் வேளாண்மை துணை இயக்குநர் புனிதா வரவேற்புரையாற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ஐரின் வேதமணி சிறப்புரையாற்றினர்.

தென்னை தினத்தின் சிறப்பாக தென்னை குறித்த 3 தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் 220 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe