கோவையில் பரபரப்பு இந்து முன்னணி நிர்வாகி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

published 2 years ago

கோவையில் பரபரப்பு இந்து முன்னணி நிர்வாகி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை, ஜூன்.14- கோவை மதுக்கரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது25). இந்து முன்னணியில் உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் அறிவொளி நகரில் மக்கள் சேவையும் ஆற்றி வருகிறார். நேற்று இரவு சரவணன் தனது மனைவியுடன் அருகே உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். மோட்டார் சைக்கிள் அவரது வீட்டின் அருகே வந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென அவரது மோட்டார் சைக்கிளை மறித்தார். இதனால் அதிர்ச்சியான சரவணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது, அந்த வாலிபரிடம் எதற்காக வாகனத்தை மறித்தீர்கள் எனச் சரவணன் கேட்டார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரவணனின் கையில் குத்தினார். இதைப் பார்த்த அவரது மனைவி அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு, அருகே இருந்த இந்து முன்னணி நகரச் செயலாளரான ஆனந்த்(20) என்பவர் ஓடி வந்தார்.

அவர் அந்த வாலிபரிடம் இருந்து சரவணனைக் காப்பாற்ற முயன்றார். இதனால் கோபம் கொண்ட வாலிபர் ஆனந்தையும் கத்தியால் குத்தினார். இருவரும் காயம் அடைந்து சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து அவர்கள், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை மதுக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆனந்த் மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகி மற்றும் உறுப்பினரை கத்தியால் குத்திய நபர் யார்? என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe