பவுண்டரியில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் தள்ளாடும் குரும்பபாளையம் மக்கள்

published 1 year ago

பவுண்டரியில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் தள்ளாடும் குரும்பபாளையம் மக்கள்

கோவை: குரும்பபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவன பவுண்டர்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுடம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் பல்வேறு தனியார் நிறுவன பவுண்டரிகள் செயல்பட்டு வருகின்றன.

குரும்பபாளையம் வடக்கு வீதியில் பல்வேறு குடியிருப்புகள் உள்ள நிலையில் இங்கு செயல்பட்டு வரும் பவுண்டரிகளில் இருந்து தினமும் நச்சு புகை வெளியேறி வருகிறது.

இதனால் சுவாசிக்கவே இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி தனி அலுவலரிடம் மனு அளித்துள்ள பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe