14 கோடியில் பிரம்மாண்டமாய் புதுப்பொலிவு பெறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.. என்னென்ன வசதிகள் தெரியுமா..?

published 1 year ago

14 கோடியில் பிரம்மாண்டமாய் புதுப்பொலிவு பெறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.. என்னென்ன வசதிகள் தெரியுமா..?

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் ஸ்டேசன் திட்டத்தின் கீழ் ரூ.14.8 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் கடந்த 1873ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்நிலையம் ஆகும். அகல ரயில் பாதை மற்றும் மீட்டர் கேஜ் ரயில் பாதையைக் கொண்ட மிகச் சில ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிலையமும் ஒன்று.

மேட்டுப்பாளையம் - சென்னை இடையே இயக்கப்படும் மிகவும் பிரபலமான 'தி நீலகிரி எக்ஸ்பிரஸ்' அல்லது 'தி ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ்' உட்பட பல்வேறு ரயில்கள், இந்த பாதை வழியாகவே கோயம்புத்தூரை அடைகிறது.

தற்போது மேட்டுப்பாளையம் ரயில்  நிலையத்தை நாள் ஒன்றுக்கு சராசரியாக 3700 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

இந்த ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள வசதிகள் :

• நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகனப் போக்குவரத்திற்கான அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. தனி நடைபாதைகள் மற்றும் வாகனங்களுக்கான தனி நுழைவு மற்றும் தனி வெளியேறும் வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

• 2 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம்.
 
• ரயில் நிலையத்தை சுற்றியுள்ள நிலப்பரப்பு அழகுபடுத்தப்பட உள்ளது.

• பிரதான நுழைவாயில் மேம்படுத்தப்பட்டு  கான்கோர்ஸ், முன்பதிவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்படுத்தப்படுகிறது. LED விளக்குகளுடன் மிளிரும்

• கோச் நிற்கும் இடம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். இந்த பலகைகள் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

• மேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுகிறது. கூடுதலான நடைமேடை நிழற்கூரைகள் அமைகின்றன. பழைய தங்குமிடங்கள்  பழுதுபார்த்து மேம்படுத்தப்படுகின்றன.

• மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்ற ரயில் நிலையமாக மேம்படுத்தபடுகிறது.

• லிஃப்ட் & எஸ்கலேட்டர்கள் வசதி செய்யப்படுகிறது.

• ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

• முறையான மற்றும் தூய்மையான குடிநீர் வசதி

• மின்சார சிக்கனத்திற்காக ரயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இத்தனை சிறப்பம்சங்களுடன்  நம்ம மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. ரயில் நிலையம் எப்படி அமைய உள்ளது என்ற மாதிரி புகைப்படத்தையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe