12 ராசிகளுக்குமான இன்றைய (08ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்டு வந்த சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : மந்தத்தன்மை நீங்கும்.
பரணி : பொறுப்புகள் குறையும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் பிறக்கும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.
ரோகிணி : நம்பிக்கை ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுபவம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொள்வீர்கள். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : சிந்தனைகள் பிறக்கும்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.
---------------------------------------
கன்னி
தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கிப் பணிகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : முடிவு உண்டாகும்.
சித்திரை : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
துலாம்
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : நன்மை உண்டாகும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
மகரம்
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆசைகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : குழப்பம் விலகும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உயர்கல்வியில் தெளிவு ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
சதயம் : தெளிவு உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
மீனம்
நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : வசதிகள் மேம்படும்.
ரேவதி : மேன்மையான நாள்.
---------------------------------------