தேசிய அளவிலான சிலம்பம் போட்டி-கோப்பையை கைப்பற்றிய கோவை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

published 1 year ago

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி-கோப்பையை கைப்பற்றிய கோவை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

கோவை: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்த போட்டியில் முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

 

மாநில அளவில் சிலம்பம் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கோவாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழகம், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில் ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, நெடு கம்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் கோவையை சேர்ந்த 12 மாணவ மாணவிகளும் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர். மேலும் ஒட்டுமொத்த போட்டியில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த போட்டியில் தாயும், மகனும், கலந்து கொண்டு  விளையாடி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe