கோவை- சீரடிக்கு முதல் நேரடி தனியார் ரயில் சேவை துவங்கியது

published 2 years ago

கோவை- சீரடிக்கு முதல் நேரடி தனியார் ரயில் சேவை துவங்கியது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார்(எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்) ரயில் சேவை நேற்று முதல் துவங்கியது. கோவை வடகோவை முதல் சீரடிக்கு இந்த ரயில் பயணமாகிறது. இது ஒரு ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. முதல் பயணத்தை துவங்கியுள்ள இந்த ரயிலுக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவப்பட்டது. இந்த துவக்க விழாவில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இயக்குனரும் நடிகருமான சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ரயிலுக்கு சவுத் ஸ்டார்(South Star) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயிலில்  பயணச்சீட்டு முதல் அனைத்து பராமரிப்பு பணிகளையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. இந்த ரயிலில் குளிர்சாதன வசதியும் உள்ளது. சிறப்பம்சமாக ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, மருத்துவர்கள் ஆகியோரும் உள்ளனர். மேலும் ரயில் பயணிகளுக்கு சிறப்பு விஐபி தரிசனமும் வழங்கப்பட்டு சீரடியில் அனைத்து பக்தர்களும் தங்கும் வகையில் அறைகளும் வழங்கபடுகின்றன.

மேலும் பயணிப்பவர்க்ளுக்கு உறங்குவதற்காக தேவையான தலையணை போர்வைகள் வழங்கப்படும். மேலும் இதில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது இதில் பக்தி பாடல்கள் ஒளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயிலானது கோவை வடகோவையில் துவங்கி திருப்பூர் ஈரோடு சேலம் பெங்களூர் மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட்டுகள் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் களில் கிடைக்கும் என தனியார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் கட்டணம் 2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணம் ஆனது 4,999 ரூபாயாக உள்ளது மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைகளுக்கு 5000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக 7,999 இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை பெட்டிகளுக்கு 7000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக 9,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு 10000 மற்றும் பேக்கேஜ்  கட்டணமாக 12,999 வசூலிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய chief public officer (southern railway) குகணேசன் இந்த ரயில் சேவையானது பாரத் கெளரவ் திட்டத்தில் உள்ளது. ஐந்து நாட்களுக்கான சுற்றுப்பயணமாக செயல் பட உள்ளதாக தெரிவித்தார். இந்த ரயில் பயணத்தில் மந்திராலயத்தில் 5 மணி நேரம் நிற்கும் எனவும் நேரத்தில் பக்தர்கள் அனைவரும் மந்த்ராலயத்தில் வழிபடலாம் எனவும் தெரிவித்தார். இந்த ரயிலை சுற்றுலா ரயிலாகத்தான் இயக்க உள்ளோம் என தெரிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதில் ஒரு கோட்சை பதிவு செய்பவர்களுக்கு ஒரு கோடி காப்பீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதில் ஏசி பெட்டிகள் உட்பட 20 பெட்டிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். தனியார் நிறுவனம் அளிக்கின்ற சேவையை இந்தியன் ரயில்வே உடன் ஒப்பிட முடியாது எனக் கூறினார். இது மாதத்தில் மூன்று முறை இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார். தனியார் நிறுவனம் அளிக்கின்ற பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை இந்தியன் ரயில்வேயும் தர முடியும் எனவும் தெரிவித்தார். இதில் பணியாற்றுகின்றவர்களும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன், இது ஒரு நல்ல முயற்சி எனவும் வரவேற்கத்தக்க முயற்சி எனவும் தெரிவித்தார். கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மக்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் பெட்ரோல் டீசல் விலை இதை விட உயர்வாக உள்ளது என பதிலளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe