சித்தா படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்- நடிகர் சித்தார்த்…

published 1 year ago

சித்தா படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்- நடிகர் சித்தார்த்…

கோவை: சித்தா படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சித்தார்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "சித்தா". இந்த திரைப்படம் விரைவில் திரையில் வரவிருக்கும் நிலையில் படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர் வேண்டி பழனிக்கு செல்கின்றனர். 

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சித்தா திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம் சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தை இருவருக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்ன தெரிவித்தார். இந்த படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்றார். பழனியில் மூன்று மதமாக படப்பிடிப்பு நடந்த நிலையில், சித்தா படம் வெற்றி பெற பழனி முருகனை படக்குழுவினருடன் தரிசிக்க செல்வதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe