விநாயகர் சிலை ஊர்வலம் : 20ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்

published 1 year ago

விநாயகர் சிலை ஊர்வலம் : 20ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் செப். 20ம் தேதி போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகரில் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி (புதன்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும் மேலும் மதியம் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு நேரத்திற்கு தகுந்தது போல கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள்:

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு செப்.20ம் தேதி அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.

பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரும் வாகனங்கள்:

பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரியில் u turn செய்து செட்டிபாளையம் ரோடு வழியாக ஜி.டி. டேங்க், ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள்:

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டிபாளையம் ரோடு, ஜிடி டேங்க், ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள்:

உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளியின் இடப்புறம் திரும்பி சிவாலய சந்திப்பு, பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைபுதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் வழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள்:

பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பேருந்துகள் பாலக்காடு ரோடு, கோவை புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவை புதூர் ஆஷ்ரம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலய சந்திப்பு வழியாக செல்வபுரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் கோவைபுதூர் பிரிவு குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலே கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வல பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கொண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe