மார்க் ஆண்டனி படக்காட்சியை நீக்க கோரி மனு

published 1 year ago

மார்க் ஆண்டனி படக்காட்சியை நீக்க கோரி மனு

கோவை: மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் குறித்த காட்சிகளை நீக்க கோரி மனு அளிக்கப்பட்டது.


கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் திருநங்கை ஜாஸ்மின் மதியழகன். அழகு கலை நிபுணர். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஷால் மற்றும் எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் (எல்.ஜி.பி.டி)  4 வகையான பாலியல் உறவு சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. 

இப்படிப்பட்ட திரைப்படங்களில் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவைக்காக அவமானப்படுத்துவதும் திருநங்கைகளின் முன்னேற்றத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுஇருக்கிறது.
 

ஆகையால் இப்படத்தை தடை செய்யுமாறு அல்லது குறிப்பிட்ட எல் ஜி பி டி மற்றும் திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். மேலும் திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe