நம்ம கோவைக்கு வரப்போகிறது - இ பஸ் சேவை

published 1 year ago

நம்ம கோவைக்கு வரப்போகிறது - இ பஸ் சேவை

கோவை : நம்ம கோவைக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி இ சேவை திட்டத்தின் கீழ் இ பஸ் இயக்கப் பட உள்ளது. இந்த இ பஸ் சேவையானது சுற்றுப்புற சுழலை எந்த வகையிலும் பாதிக்காதவாறு அமைக்கப் படவுள்ளது.

இதற்கான பணிகளை தொடங்க மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கோவை மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கு இந்த சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய அரசு இந்த இ பஸ் சேவைக்கு அனுமதி வழங்கி, இதற்காக 57 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்குவதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளனர்.

இத்திட்டம் முதலில் 3 லட்சத்திற்க்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் இயக்கப்பட உள்ளது.இதற்கான பட்டியலில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

இது போன்று இன்னும் 11 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நம் கோவை மாவட்டத்தில் முதலில் இருக்கும் நிலையில், 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் 150 இ பஸ் இயக்கப் படவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe