வால்பாறையில் எரிபொருள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

published 2 years ago

வால்பாறையில் எரிபொருள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: வால்பாறையில் எரிபொருள் இல்லாமல் இரு சக்கர நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் எரிபொருள் இல்லாமல் இரண்டு சக்கர நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். வால்பாறை மலைப்பகுதி என்பதால் இரண்டு எரிபொருள் டீலர்கள் மட்டுமே உள்ளனர்.

இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் என சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இந்தநிலையில்,  நேற்று இரண்டு மணி அளவில் வால்பாறை பகுதியில் உள்ள இரண்டு பங்குகளில் எரிபொருள் இல்லாமல் கனரக வாகனம் மற்றும் அவசர ஊர்திகள் நிறுத்தப்பட்டன.

சுமார் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது இதனால் டீலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து டீலர்கள் கூறுகையில், "பாரத் பெட்ரோலிய நிறுவனம் குறித்த நேரத்தில் வழங்காததை இதற்கு காரணம்" என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe