விவசாயிகள், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டம்…

published 1 year ago

விவசாயிகள், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டம்…

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை
உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மனித வனவிலங்கு மோதல் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக விவாதித்து தக்க தீர்வுகான விவசாயிகள், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை உள்ளடக்கிய முத்தரப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ். பொள்ளாச்சி வன அலுவலர் பார்கவதேஜா, இணை இயக்குநர் வேளாண்மைத்துறை முத்துலெட்சுமி, விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,
மனித வனவிலங்கு மோதல் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக விவாதித்து தக்க தீர்வுகாண்பதற்கான இக்கூட்டம் நடைபெறுகின்றது. விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அக்கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாநில அளவில் நடவடிக்கை எடுக்க கூடிய கோரிக்கைகளுக்கு கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே அவற்றிற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்கு நிலுவையில் உள்ளன. அடுத்த என்ன விதமான நடவடிக்கைகள் கொள்ளலாம், என்பது குறித்தும் அறிந்து மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும்  புதியதாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன மாதிரியான தீர்வுகள் காண முடியும் என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூடத்தில் விவசாயிகள், யானைகள் வலசைப்பாதையை மீட்கவும், அகழிகள் அமைக்கவும், வன எல்லையில் உள்ள அகழிகளை பராமரிக்கவும். வன எல்லையை சுற்றி சூரிய ஒளி மின் வேலி மற்றும் உபயோகமில்லாத ரயில் பெட்டிகளை கொண்டு வேலி அமைத்திடுமாறும் கோரிக்கை வைத்தனர். மேலும், யானைகள் அதற்கான உணவுகள் இல்லாத போது விவசாய நிலத்திற்கு வருவதை தடுக்க அதற்கான உணவுகள், தண்ணீர் வனத்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

வன விலங்கினால் ஏற்படும் உயிர் சேதத்திற்கும், பயிர் இழப்பிற்கும் இழப்பீடு அதிகபடுத்துமாறு கோரிக்கை வைத்தனர். வன எல்லையில் கருவேல், நெறிஞ்சி ஆகியவற்றை நட்டால் யானை அதை தாண்டி வருவதை தடுக்கலாம் எனவும் கூறினர், தடாகம் பகுதியில் போடப்பட்ட வேலியை 15 கி.மீ விரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், வனத்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள Toll free எண்ணை செயல்படுத்துமாறும் கோரிக்கை வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe