விளாங்குறிச்சியில் வழிப்பறி- பொதுமக்கள் அச்சம்…!

published 1 year ago

விளாங்குறிச்சியில் வழிப்பறி- பொதுமக்கள் அச்சம்…!

கோவை: விளாங்குறிச்சி பகுதியில் மீண்டும் நடைபெற்றுள்ள வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் ரமேஷ் (33). இவர் கோவையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ரமேஷ் தனது நண்பரை பார்க்க விளாங்குறிச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ரமேசை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினர்.

மேலும், ரமேஷிடம் இருந்து விலையுயர்ந்த செல்போன், ரு.500 பணமும் பறித்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாங்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் இங்கு காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரித்திட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe