கோவை அருகே மரத்தின் மீது மோதி லாரி விபத்து- தடாகம் போலிசார் விசாரணை…

published 1 year ago

கோவை அருகே மரத்தின் மீது மோதி லாரி விபத்து- தடாகம் போலிசார் விசாரணை…

கோவை: கோவை அருகே மரத்தின் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது குறித்து தடாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தடாகம்- பன்னிமடை பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியில் இருந்து துடியலூர் குருடம்பாளையம் பஞ்சாயத்தில் குப்பை ஏற்றுவதற்காக சென்ற லாரி பன்னிமடை பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சுந்தரபாண்டியன் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் இது குறித்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்ற காவல் துறையினர் லாரியை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் லாரியின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது.

அப்பகுதியில் மழை பெய்து சேறாக இருந்ததால் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe