இந்தியாவில் முதல் முறையாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக கார்டூன் வீடுயோக்கள் வெளியிட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

published 1 year ago

இந்தியாவில் முதல் முறையாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக கார்டூன் வீடுயோக்கள் வெளியிட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. 'பிங்க்' நிறம்  மற்றும் பிங்க் நிற ரிப்பன் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அடையாளப்படுத்துவதாக பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவருவதால் இந்த மாதத்தை 'பிங்க் அக்டோபர்' என்று உலகம் முழுவதும் அழைக்கின்றனர்.  நகர்ப்புறத்தில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் முதலாவதாக இருப்பது மார்பக புற்றுநோய் தான்.

இந்த நிலையில் கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இந்தியாவில் முதன் முறையாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கார்ட்டூன் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

இவற்றை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் சி.ஓ.ஓ. சுவாதி ரோஹித், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயண சுவாமி ஆகியோர் வெளியிட்டனர். இந்த வீடியோக்களை பார்க்க QR code-ஸ்கேன் செய்தோ அல்லது பிரத்தியேக இணையதளம் (https://mhits.in/SRIOR/breast_cancer_2023/) மூலமாகவோ பார்வையிடலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் குறித்து ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் குகன் கூறியதாவது:

மார்பக புற்றுநோய் குறித்த கண்ணோட்டம், மார்பக புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங், சிகிச்சை மற்றும் சிகிச்சைகளின் பக்கவிளைவுகள், கர்ப்ப காலத்தில் மார்பகபுற்றுநோய் குறித்த முக்கிய தகவல்கள் இந்த வீடியோக்களில் உள்ளன. மேலும் இந்த வீடியோக்கள் ஒரு பிரிவில் ஆண்களிடத்தில் ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் அதிக நகர்புறத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. மார்பக புற்றுநோயால் பாதித்தவர்களில் 50 சதவீத பேர் உயிரிழக்கின்றனர்.

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இவ்வித புற்றுநோய்களை 70 சதவீதம் பேர் ஆரமப நிலையிலேயே கண்டுபிடித்து விடுகின்றனர். இந்தியாவில் அப்படி இல்லை. புற்றுநோய் கட்டி பெரியதான பிறகு தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால் கட்டியை குணப்படுத்துவதில் தொடகி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை அளித்து முடித்தாலும் மீண்டும் அவர்களுக்கு நோய்ப்தாக்குதல் ஏற்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது 4-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுதல், 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்தல், மதுப்பழக்கம்,, உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட காரணத்தால் மார்பக புற்றுநோய் ஏற்டுகிறது. இதனால் தான் இம்மாதம் அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்கிறோம். மார்பக புற்றுநோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 1.90 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு குகன் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe