உலக விண்வெளி வார விழா- கோவையில் விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் துவக்கம்...

published 1 year ago

உலக விண்வெளி வார விழா- கோவையில் விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் துவக்கம்...

கோவை: உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு கோவையில் விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் துவக்கப்பட்டுள்ளது.

உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கி உள்ள மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.

அக்டோபர் 4ம்தேதி முதல் 10 ம்தேதி வரை, உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஶ்ரீ ஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விண்வெளி கண்காட்சியை நடத்துகிறது.

இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில்
எஸ்.எஸ்.எல்.வி,மற்றும் ஜி.எஸ்.எல்.வி, உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ராக்கெட்டுகள் மாதிரி, சந்திராயன் 3, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பார்வையிடுபவர்களுக்கு அது குறித்தான விளக்கங்களும் கல்லூரி மாணவ மாணவிகள் விளக்கமாக தெரிவிக்கின்றனர்.

மேலும் கண்காட்சியில் பங்கு கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கண்காட்சி குறித்த போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe