பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்குறாங்க..! மாணவர்களே.. இளைஞர்களே மிஸ் பன்னிடாதீங்க...!!

published 1 year ago

பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்குறாங்க..!  மாணவர்களே.. இளைஞர்களே மிஸ் பன்னிடாதீங்க...!!

கோவை: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் பொள்ளாச்சியில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இரண்டாவது சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14ம் தேதி காலை 8 மணியளவில் பொள்ளாச்சியில் அமைந்துள்ள PA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்திதுறை. ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம் ஐடித்துறை ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 20,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள் பொறியியல் மாணவர்கள் எனஅனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயதுவரம்பு இல்லை. மேலும் அனுமதி முற்றிலும் இலவசம். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும்.

இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடும் மனுதாரர்கள் https:/formsgle/t6HNkNPwAvYSUX046 என்ற Link லும் விவரங்களைப் பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9499056937 என்ற எண்ணில் காலை 10,00 மணி முதல் மாலை 6.00 மணிவரை தொடர்பு கொள்ளவும்,

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், தனியார்துறை நிறுவனங்கள் https:/formsglenFx2YeJKC¢DhV8Nr6 என்ற Link ல் விவரங்களை பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு வேலையளிப்போர் (Employer) 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மனுதாரர்கள் அதிகஅளவில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.

இவ்வாமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe