வேளாண் பல்கலையில் 3ம் கட்ட மாணவர் சேர்க்கை

published 1 year ago

வேளாண் பல்கலையில் 3ம் கட்ட மாணவர் சேர்க்கை

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் காலியாகவுள்ள இடங்களை, நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட உடனடி மாணவர்கள் சேர்க்கை, நாளை (10ம் தேதி) நடைபெறும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

நேரடியாக கோவை வேளாண் பல்கலையில் நடக்கும் கலந்தாய்வில், வருகை பதிவு, காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை பெறப்படும். இச்சேர்க்கை வேளாண் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்; உறுப்பு கல்லுாரிகளுக்கு பொருந்தாது. இதில், இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் மட்டுமே கலந்தாய்வு கட்டணம் வசூலிக்கப்படும்.

பொது கலந்தாய்வில், இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவற விட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், இதில் பங்கேற்கலாம்.

இணைப்பு கல்லுாரிகளில், ஆண்டு கட்டணம், விடுதி, உணவு கட்டணம் தவிர்த்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்கள் விபரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை இன்று பல்கலை இணையதளத்தில், http://tnagfi.ucanapply.com வெளியிடப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe