பெற்றோர்களே மிஸ் பன்னாம உங்க குழந்தையை இந்த பூங்காவுக்கு கூட்டிட்டு போங்க..

published 1 year ago

பெற்றோர்களே மிஸ் பன்னாம உங்க குழந்தையை இந்த பூங்காவுக்கு கூட்டிட்டு போங்க..

கோவை: குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கோவையில் அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட டாடாபாத் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் பூங்காவை தனியார் பங்களிப்புடன் 20 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த பூங்காவின் உள்ளே சென்றதும் சுற்றுச்சுவர்களில் உலக விஞ்ஞானிகளின் புகைப்படம், அவர்கள் பிறந்த தேதி, கண்டுபிடிப்பு விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து பூங்காவினுள் செல்லும் போது மணி கோபுரம். இசை குழாய், ஆட்டோமொபைல் மாதிரி, மழை மானி, ஈர மானி, காற்று வேக அளவு, நியூட்டன் மூன்றாவது விதி, ஒளியின் திசை வேகம் எப்படி பயன்படுத்துவது, கண்ணாடிகளுடன் விளையாட்டு, தனிம அட்டவணை, டி.என்.ஏ., மாதிரி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பொருட்களை நேரில் பார்ப்பது மட்டுமின்றி, செயல்முறையாக செய்து பார்க்கையில் அறிவியலின் இயக்கங்கள் குறித்து குழந்தைகளால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

பாம்பு கடித்தால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி, மழைநீர் சேகரிப்பு முறை, தீ பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு குறித்து வரை படங்களும் இடம் பெற்றுள்ளன. குட்டீஸ்க்கு பிடித்த அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் செலுத்திய, ராக்கெட்டும் இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளது.

இந்த பூங்கா காலை 9 மணி முதல் மதியம் 1 மணி  வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும்  திறந்திருக்கும். குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு குழந்தைகளுடன் பெற்றோர் சென்றுவரலாம்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe