கோவை - மேட்டுப்பாளையம் இடையே 20ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை

published 2 years ago

கோவை - மேட்டுப்பாளையம் இடையே 20ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை

கோவை, ஜூன் 18: கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவையில், 20ஆம் தேதி முதல் கூடுதல் டிரிப்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில், நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரயிலானது, 1.50 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும். 8.25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். இந்த ரயில் வடகோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe